பிளாஷ்பேக் : 22 மொழிகளில் சப் டைட்டில் போடப்பட்ட முதல் தமிழ் படம் | 150 ரூபாய் இல்லாமல் கஷ்டப்பட்டேன்: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் | ''பிரச்னை பண்ணக்கூடாது, ஸ்வீட் ஆக இருக்கணும்'': டிடிஎப் வாசனுக்கு அபிராமி அட்வைஸ் | சோஷியல் மீடியாவில் திடீரென வைரலான 'கிரிஜா ஓக் காட்போலி' | ஹீரோனு சொல்லாதீங்க.. கதைநாயகன்னு கூப்பிடுங்க: முனிஸ்காந்த் கெஞ்சல் | திடீரென உயரும் 'தளபதி கச்சேரி' பாடலின் 'வியூஸ்' | ப்ரூஸ் லீ படத்தின் 'இன்ஸ்பிரேஷன்' தான் 'சிவா' | தமிழ் மார்க்கெட்டை குறி வைக்கும் ஸ்ரீலீலா, பாக்யஸ்ரீ | தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் |

மண் சாலை பந்தயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள, ‛மட்டி' படம், டிச. 10ல் தியேட்டரில் வெளியாகிறது. அறிமுக இயக்குனர் பிரகபல் இயக்க, யுவன், ரிதான் கிருஷ்ணா நடிகர்களாக அறிமுகமாகின்றனர். ஹாலிவ்டில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்ய, சன்லோகேஷ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். கே.ஜி.எப்., படப்புகழ், ரவி பசுருர் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் ,ஹிந்தி, ஆங்கிலம் என ஆறு மொழிகளில் வெளியாகிறது.
இயக்குனர் கூறியதாவது: பைக் ரேஸ் பற்றி நிறைய படம் வந்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக மண் சாலையில் நடக்கும் பந்தயத்தை மையமாக கொண்ட முதல் படமிது. 14 கேமராவை வைத்து படமாக்கினோம். நாயகன் தவிர நிஜ மட்ரேஸர்ஸ் நடித்துள்ளனர். நாயகனும் 2 ஆண்டு பயிற்சி எடுத்தார். எந்த ஒரு டூப்பும் இல்லை. நிறைய ஓ.டி.டி.,யில் கேட்டனர், ஆனால் படத்தின் பிரம்மாண்டத்தை தியேட்டரில் ரசிகர்கள் காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.