25 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 1 ரூபாய் அட்வான்ஸ் | சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூ இயர்' பாடலை படமாக்கிய மூத்த ஒளிப்பதிவாளர் பாபு காலமானார் | டிச., 25ல் சிறை ரிலீஸ் : உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட விக்ரம் பிரபு படம் | இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் படம் வா பகண்டையா. ப.ஜெயகுமார் தயாரித்து, இயக்கி இருக்கிறார். புதுமுகங்கள் விஜய தினேஷ், ஆர்த்திகா, நிழன், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள், எஸ்.கே.ராஜ்குமார் இசை அமைத்திருக்கிறார். ராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ப.ஜெயகுமார் கூறியதாவது: வா பகண்டையா என்பது ஒரு கிராமத்தின் பெயர். விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் அந்த கிராமம் தான் கதைக்களம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை இப்படம் பேசுகிறது என்றாலும், காதல், காமெடி, நகைச்சுவை என அனைத்து ஜனரஞ்சகமான அம்சங்களும் நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும்.
இந்த படத்தில் இந்து மதத்தால் தான் சாதி பிரிவினை உருவானது என்ற பொய்யான குற்றச்சாட்டை உடைத்தெரிந்திருக்கிறேன். இங்கு சாதியை காட்டி மதம் மாற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கு மாறவேண்டியது மதம் அல்ல மக்கள் தான். மக்களின் மனங்களில் இருக்கும் சாதி உணர்வை மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர, மதத்தை அல்ல.
நம் இந்து மதம் மிகவும் புனிதமானது. அதை சிலர் கொச்சைப்படுத்தும் வகையில் பேசிக்கொண்டிருப்பதோடு, மக்கள் மனதில் பல தவறான கருத்துக்களை விதைக்கிறார்கள். அவர்களுக்கு இந்த படத்தின் மூலம் பதில் சொல்லி இருக்கிறேன். என்றார்.