2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் |
சண்டக்கோழி, ஆயுத எழுத்து, புதிய கீதை, ரன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து, ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். தமிழ், மலையாளம் என இருமொழியிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். கடந்த 2014-ம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட மீரா, அதன்பிறகு நடிப்பிற்கு முழுக்குப் போட்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் உடல் எடை கூடியிருந்தார் மீரா ஜாஸ்மின். தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ள அவரின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதோடு கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து மலையாளத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் மீரா ஜாஸ்மின். சத்யன் அந்திக்காடு இயக்கும் அந்தப் படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார்.