நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அம்மா (AMMA) என்று அழைக்கப்படும் மலையாள திரைப்பட நடிகர் சங்கம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புவரை கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இயங்கி வந்தது. இந்த நிலையில் தற்போது கொச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு மாற்றப்பட்டு நடிகர் சங்கத்தின் புதிய அலுவலகம் இயங்கி வருகிறது. நடிகர் சங்கத்தின் தலைவராக மோகன்லால் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில சமீபத்தில் நடிகர் சங்கத்தின் ஓணம் விழா கொண்டாட்டத்தை துவங்கி வைக்கு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு வருகை தந்த மோகன்லால், நடிகர் சங்கத்துக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள யு-டியூப் சேனல் ஒன்றையும் துவங்கி வைத்தார். இந்த சேனல் மூலம் நடிகர் சங்கத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள், நலத்திட்டங்கள் ஆகியவற்றை உறுப்பினர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.