முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் | குழந்தைகளும் பார்க்கும் வகையிலான பேய்கதை | அரசியலில் இருந்து விலகிய பிறகும் விமர்சிக்கிறார்கள்: சிரஞ்சீவி பேச்சு | மதுரை மாநாடு நடப்பதென்ன... நடிகர், நடிகைகள் இணைகிறார்களா? | மூத்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் |
நேரம், பிரேமம் என இரண்டு வெற்றிப்படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானாலும் கூட, அந்தப்படம் வெளியாகி சுமார் 5 வருடங்கள் எந்தப்படமும் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்ரன், பஹத் பாசில் - நயன்தாராவை இணைத்து பாட்டு என்கிற படத்தை இயக்கப்போவதாக கடந்த செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஆனால் தற்போது பாட்டு படத்தை அல்போன்ஸ் புத்ரன் தள்ளிவைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காரணம் தற்போது பஹத் பாசில் தெலுங்கு மொழியிலும் நடிக்க துவங்கி பிஸியாகி விட்டதால், பாட்டு படத்தை துவங்க இன்னும் பல மாதங்கள் ஆகுமாம். அதேசமயம் பிரித்விராஜூக்காக இவர் தயார் செய்து வைத்திருந்த கதை ஒன்றை அவரிடம் சொல்ல, பிரித்விராஜும் அந்த கதையை ஒகே பண்ணி விட்டாராம். அதனால் பிரித்விராஜ் படத்தை முதலில் ஆரம்பிக்கும் பணியில் இறங்கி இருக்கிறாராம் அல்போன்ஸ் புத்ரன்.