ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
பெரும்பாலும் முன்னணி நடிகர்களின் சண்டைக்காட்சிகளிலும் மற்றும் அவர்கள் இரண்டு வேடங்களில் நடிக்கும் படங்களிலும் அவர்களுக்கு டூப் ஆக நடிப்பதற்கு என்று சிலர் இருப்பார்கள். அவர்கள் நடிகர்களாகவோ அல்லது ஸ்டண்ட் கலைஞர்களாகவோ இருப்பது வழக்கம். ஆனால் மலையாளத்தில் மோகன்லால் தந்தை மகன் என இரண்டு வேடங்களில் நடித்த ராவண பிரபு என்கிற படத்தில் அவருக்கு டூப் ஆக நடித்தவர், ராஜன் கோயிலாண்டி என்கிற உதவி கலை இயக்குனர்.
கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக, சினிமாவில் கலை இயக்குனர் பிரிவில் பணியாற்றி வந்த ராஜன் தனக்கென எதுவும் பெரிதாக சேர்த்து வைக்கவில்லை. தற்போது கொரோனா தாக்கம் காரணமாக எந்த வேலைகளும் நடைபெறாத நிலையில், மாவூர் என்கிற பகுதியில் உள்ள பார் ஒன்றில் செக்யூரிட்டி வேலைக்கு சேர்ந்துள்ளார் ராஜன். சினிமாவில் வேலை பார்ப்பவர்களுக்கு நிரந்தரம் என எதுவும் இல்லை, அடுத்த வேளை உணவு வேண்டுமென்றால் எந்த வேலையும் பார்க்க தயங்கக்கூடாது என்பதால்தான் செக்யூரிட்டி பணியில் சேர்ந்ததாக கூறுகிறார் ராஜன்.