ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

மகேஷ்பாபு தற்போது தெலுங்கில் நடித்து வரும் படம் 'சர்க்காரு வாரி பாட்டா'. இயக்குனர் பரசுராம் இயக்கிவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்புவரை நடைபெற்று வந்தது. ஒருபக்கம் கொரோனா பரவல் அதிகரிக்க, இன்னொரு பக்கம் படக்குழுவினரில் சிலரும் மகேஷ்பாபுவின் பெர்சனல் ஒப்பனை கலைஞரும் கூட கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். இதனை தொடர்ந்து படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் அந்தப்படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்த, 39 வயதே ஆன குமார் வட்டி என்பவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இன்று மரணத்தை தழுவியுள்ளார். இது மகேஷ்பாபு படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குனர் பரசுராமிடம் பல படங்களில் உதவியாளராக பணியாற்றிய குமார் வட்டி, கடந்த 2017ல் 'மா அப்பாயி' என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். தற்போது தனது குருநாதர் பரசுராம் இயக்கிவரும் மகேஷ்பாபுவின் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில், கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை எடுத்து வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார் குமார் வட்டி




