'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? |
இயக்குனர் ராஜமவுலியின் படங்களின் வெற்றிக்கு கதாசிரியராக அவரது தந்தை விஜயேந்திர பிரசாத் ஒரு தூணாக இருக்கிறார் என்றால் இன்னொரு பக்கம் ராஜமவுலியின் மகன் எஸ்.எஸ் கார்த்திகேயா ஒரு உதவி இயக்குனராக தனது தந்தையின் பணிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இந்த நிலையில் எஸ்.எஸ் கார்த்திகேயா முதன் முறையாக தயாரிப்பில் இறங்கி ‛டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்' என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை சஷாங் ஏலட்டி என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக பஜத் பாசில் நடிக்கிறார். புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து தெலுங்கில் பஹத் பாசில் நடிக்கும் படம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. இதில் பஹத் பாசில் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் எஸ்.எஸ் கார்த்திகேயா.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எப்போதுமே பஹத் பாசில் நடிப்பை பார்ப்பது என்பது ஒரு விருந்து போலத்தான். தாங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களுக்குள் மறைந்து போகும் வெகுசில அரிதான நடிகர்களில் பஹத் பாசிலும் ஒருவர். அவரை ஒவ்வொரு முறை திரையில் பார்க்கும்போதும் கண்களை அகற்ற முடியாது. இத்தனை வருடங்களாக அவரது நேர்மை, ஸ்திரத்தன்மை மற்றும் அவரது கண்களில் தெரியும் வெறித்தனம் ஆகியவற்றிற்காக அவரை பார்த்து பிரமிக்கிறேன். அவரை எனது முதல் தயாரிப்பின் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு அழைத்து வருவது என்னுடைய கனவு மட்டுமல்ல மிகப்பெரிய பொறுப்பும் கூட” என்று கூறியுள்ளார்.