கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
ஒரு குறிப்பிட்ட சில நடிகர்களுக்கே சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை ரசிகர்களாக இருப்பது அபூர்வமான விஷயம். அந்த வகையில் மலையாள திரையுலகில் நடிகர் மோகன்லால் இளம் வயது ரசிகர்கள் முதல் வயதானவர்கள் வரை ரசிகர்களாக கொண்டுள்ளார். அவரது புலி முருகன் திரைப்படம் வெளியான போது இரண்டு மூன்று வயது குழந்தைகள் கூட அதே போன்ற கெட்டப்பில் ரீல்ஸ் வீடியோக்கள் போட்டது வைரலானது.
இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த 96 வயதான ராகவன் நாயர் என்பவர் தான் மோகன்லாலின் தீவிரமான ரசிகன் என்றும் அவரை ஒரு முறையாவது சந்தித்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றும் சோசியல் மீடியாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது. மோகன்லால் கவனத்திற்கும் சென்றது.
இதனை தொடர்ந்து, “அன்புள்ள ராகவன் சேட்டா. உங்கள் வீடியோ பார்த்தேன்.. என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும், என் படங்களை நீங்கள் ரசித்துப் பார்ப்பதையும் அறிந்து மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு என் அன்பும் பிரார்த்தனைகளும். நிச்சயமாக ஒரு நாள் உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்போது சந்திப்பேன்” என்று பதில் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் சத்தமே இல்லாமல் அந்த வயதான ரசிகரை நேரில் சந்தித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் மோகன்லால். இது குறித்த வீடியோ ஒன்றை அந்த ரசிகர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். 96 வயதில் இருக்கும் நபர் மோகன்லாலின் ரசிகராக இருப்பதும் அவரது கோரிக்கையை ஏற்று மோகன்ளால் அவரை சந்தித்ததும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது..