நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019ல் மோகன்லால் நடிப்பில் வெளியாகிய வெற்றியை பெற்ற படம் லூசிபர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எம்புரான் என்கிற பெயரில் தயாராகியுள்ளது. வரும் மார்ச் 27ல் திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், பிரித்விராஜ், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் என முக்கிய நட்சத்திரங்கள் இதிலும் தொடர்கின்றனர். இவர்களோடு முதல் பாகத்தில் ஒரு டிவி சேனல் சிஇஓ கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நைலா உஷாவும் அதே கதாபாத்திரத்தில் தொடர்கிறார். இவரது கதாபாத்திர போஸ்டரை நடிகர் மோகன் வெளியிட்டார்.
இந்த படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நைலா உஷா கூறும்போது, “முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்தில் இன்னும் கூடுதலாக சில மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் ஒரு டிவி நிர்வாகத்தின் சிஇஓ ஆக இருந்தேன். இப்போது ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. அரசியல் படம் என்பதால் இத்தனை வருடங்களில் அரசியலும் மாறிவிட்டது. அதேபோல என்னுடைய கதாபாத்திரத்தின் மனநிலையும் மாறி இருக்கும் இல்லையா? அதற்கு ஏற்றபடி எனது கதாபாத்திரம் எம்புரானில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.