‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் ஆசிப் அலி, அனஸ்வரா ராஜன் இணைந்து நடித்த ரெக்கசித்திரம் என்கிற படம் வெளியானது, 1985களின் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் ஜோபின் டி சாக்கோ என்பவர் இயக்கியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மம்முட்டி, மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான ஹாரர் திரைப்படமான பிரிஸ்ட் என்கிற வெற்றி படத்தை தொடர்ந்து அடுத்து இவர் இயக்கியுள்ள இரண்டாவது படம் இது. இந்த படம் வெளியான நாளிலிருந்து நல்ல வரவேற்புடன் வசூலையும் குவித்து வருகிறது. இதில் முக்கிய அம்சமாக நடிகர் மம்முட்டி கொஞ்ச நேரமே வந்து போகும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். காரணம் அந்த கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்தால் மட்டுமே அது சரியாக இருக்கும் என்பதால் தான்.
அதுமட்டுமல்ல மம்முட்டி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று பிரிஸ்ட் படத்தின் மூலம் தனக்கு வெற்றியை தேடி தந்த இயக்குனரின் படம் என்பது ஒரு காரணம். மேலும் தான் நடித்த ரோஷாக் என்கிற படத்தில் தன் வேண்டுகோளை ஏற்று முகமே காட்டாமல் ஒரு கோஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ஆசிப் அலிக்காக நன்றி கடன் காட்டும் விதமாக நடித்தார் என்பது இன்னொரு காரணம். அது மட்டுமல்ல சமீபத்தில் இந்த படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. இந்த விழாவிலும் நடிகர் மம்முட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இப்படி ஒரு படம் வெற்றி பெறும்போது அதற்கு மக்கள் அனைவருக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டியது நம்முடைய கடமை” என்றும் கூறினார்.