மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் |
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா என்கிற திரைப்படம் வெளியானது. தெலுங்கையும் தாண்டி தென்னிந்திய அளவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இந்த படம் பாலிவுட்டிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம் கடந்த இரண்டு வருடங்களாகவே தயாராகி வந்த நிலையில் தற்போது வரும் டிசம்பர்-5ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன், நாயகி ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார். அல்லு அர்ஜுனின் ஒரு ரசிகராக மட்டும் அல்லாமல் சக சினிமா நண்பராக இந்த நிகழ்வில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா, அல்லு அர்ஜுனுக்கென ஸ்பெஷலாக வடிவமைத்த இரண்டு டீ ஷர்ட்களை அவருக்கு பரிசாக அளித்தார். அதில் ரவுடி புஷ்பா என்கிற வார்த்தைகள் பொறிக்கப்பட்டு இருந்தது.
ரவுடி என்பது விஜய் தேவர கொண்டவை தெலுங்கு ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் பெயர். அதுமட்டுமல்ல அந்த ரவுடி என்கிற பெயரிலேயே துணி வியாபாரம் ஒன்றை ஏற்கனவே துவங்கி ஆடைகள் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார் விஜய் தேவரகொண்டா. இந்த வகையில் தனது ரவுடி கம்பெனியின் துணியிலேயே அல்லு அர்ஜுனுக்கு டீ சர்ட் தயார் செய்து கொடுத்து அவரது ரசிகர்களின் அன்பை பெற்றதுடன் தனது நிறுவனத்தையும் இலவசமாகவே புரமோட் செய்து கொண்டும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார் என்றே சொல்லலாம்.