அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி தேஜா. சமீபகாலமாக இவர் நடித்து வெளிவந்த ஈகிள், டைகர் நாகேஸ்வர ராவ், மிஸ்டர் பச்சான் ஆகிய படங்கள் தொடர் தோல்வியை தழுவின.
கடைசியாக ஹிந்தியில் வெற்றி பெற்ற 'ரைடு' படத்தை தெலுங்கில் 'மிஸ்டர் பச்சான்' என்கிற பெயரில் ரீமேக் செய்து நடித்திருந்தார். இதனை ஹரிஷ் ஷங்கர் இயக்கிருந்தார். பீபுள் மீடியா பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
சுமார் ரூ. 80 கோடி பொருட்செலவில் உருவான இப்படம் திரையரங்குகளில் ரூ. 15 கோடி அளவில் தான் வசூலித்தது என கூறப்பட்டது. இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை சரி செய்யும் வகையில் ரவி தேஜா தான் இப்படத்திற்காக பெற்ற சம்பளத்தில் இருந்து ரூ. 4 கோடியை தயாரிப்பாளருக்கு திருப்பி தந்துள்ளார். இவரை போலவே இயக்குனர் ஹரிஷ் ஷங்கரும் ரூ. 2 கோடியை தயாரிப்பாளருக்கு திருப்பி தந்துள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.