லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
2012ம் ஆண்டு 'பிரபுவின்டே மக்கள்' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இப்போது 50வது படத்திற்கு வந்திருக்கிறார் டொவினோ தாமஸ். அதாவது மலையாளத்தில் 50வது படம் 'ஏஆர்எம்'. "மின்னல் முரளி" மற்றும் "2018 - எவ்ரி ஒன் இஸ் எ ஹீரோ" ஆகிய படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு அவர் நடிக்கும் படம். இந்த படத்தை மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கிறது. அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்குகிறார். இப்படம், முழுக்க முழுக்க 3டியில் உருவாகியுள்ளது.
கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, பாசில் ஜோசப், ஜெகதீஷ், ஹரிஷ் உத்தமன், ஹரிஷ் பெராடி, பிரமோத் ஷெட்டி மற்றும் ரோகினி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சுஜித் நம்பியார் திரைக்கதை எழுத, திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ஜிதின் லால் கூறியதாவது: வெவ்வேறு தலைமுறைகளான மணியன், குஞ்சிக்கெழு மற்றும் அஜயன் என ஒவ்வொருவரும் ஒரு முக்கிய நிலப் பொக்கிஷத்தைப் பாதுகாக்க பாடுபடுகிறார்கள். அவர்கள் தலைமுறை வழியில் எப்படியான போராட்டத்தை செய்கிறார்கள் என்பதுதான் கதை. பேண்டசி ஆக்ஷன் திரில்லராக படம் உருவாகி வருகிறது. டொவினோ தாமஸ் களரி கலைஞராகவும், திருடனாகவும் நடித்துள்ளார். சரித்திர காலம், நிகழ்காலம் என இரண்டு காலகட்டத்தில் நடக்கிற கதை.
இந்திய சினிமாவின் மிக முக்கியமான படைப்பாக இந்த படம் இருக்கும். கேரளாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் இப்படம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மலையாளம், இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் செப்டம்பர் 12ம் தேதி வெளியாகிறது. என்றார்.