ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
கன்னட திரையுலகில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக அறியப்படுபவர் ரக்சித் ஷெட்டி. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நாய்க்கும் மனிதனுக்குமான அன்பை மையப்படுத்தி வெளியான ‛சார்லி 777' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் அறிமுகமானவர். இன்னும் சொல்லப்போனால் நடிகை ராஷ்மிகாவுக்கும் இவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் வரை சென்று கடைசி நேரத்தில் நின்று போனது சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும் தற்போது படங்களை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இவரது நடிப்பில் ‛பேச்சுலர் பார்ட்டி' என்கிற படம் வெளியானது. இந்தப் படத்தை இவரே தயாரித்தும் இருந்தார். அர்ஜுன் ராமு என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ஏற்கனவே வெளியான நியாய எல்லிடே மற்றும் காலிமாத்து ஆகிய படங்களில் இடம் பெற்ற பாடல்களை தங்களது அனுமதி இல்லாமல் இந்த படத்தில் பயன்படுத்தி இருப்பதாக எம்ஆர்பி மியூசிக் என்கிற நிறுவனம் புகார் அளித்திருந்தது. இதைத்தொடர்ந்து காப்பிரைட் உரிமை சட்டத்தின்படி பெங்களூரு போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.