வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கேரளாவை போல தமிழகத்திலும் இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூலித்தது. மலையாளத்திலேயே முதன்முறையாக 200 கோடி வசூலித்த படம் என்கிற பெருமையும் பெற்றது. ஆனால் இந்த படத்தின் தயாரிப்பு செலவுக்காக தான் 7 கோடி ரூபாய் பைனான்ஸ் செய்திருந்ததாகவும் படம் வெளியான பிறகு லாபத்தில் 40 சதவீதம் தனக்கு தருவதாக படத்தின் தயாரிப்பாளர்களான நடிகர் சவ்பின் சாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி இருவரும் ஒப்பந்தம் செய்திருந்தனர், ஆனால் படம் வெளியான பிறகு லாபத் தொகையை தர மறுக்கின்றனர் என்றும் கூறி சிராஜ் வலியதாரா ஹமீது என்பவர் இவர்கள் மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த எர்ணாகுளம் நீதிமன்றம் மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் வங்கிக்கணக்கை முடக்கியதுடன் இதுகுறித்து விசாரிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு வரும் மே 22ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் மே 22 வரை தாங்கள் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக முன் ஜாமீன் வழங்குமாறு கோரி சவ்பின் சாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி இருவரும் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். அவர்களது மனுவை விசாரித்த நீதிமன்றம் இவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
இவர்கள் அளித்த மனுவில், தாங்கள் லாபத்தொகை தராமல் ஏமாற்றவில்லை என்றும் வழக்கு தொடர்ந்துள்ள சிராஜ் என்பவர் ஆன்லைன் மீடியாக்களில் வெளியாகும் 250 கோடி வசூல் என்பது போன்ற தொகைகளை மனதில் வைத்துக் கொண்டு லாபத்தை கேட்கிறார் என்றும் கூறியிருந்தனர். ஆனால் முறைப்படி இந்த படம் எவ்வளவு வசூலிக்கிறது என்பதை சரியாக கணக்கிட்டு அதன் பிறகு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி அவருக்கு லாபத்தொகை பகிர்ந்து அளிக்க இருக்கிறோம் என்றும் அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.