பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது |

எப்போதுமே சர்வைவல் திரில்லர் படங்கள் குறைந்தபட்ச வெற்றிக்கு உத்தரவாதம் தருபவை. ரசிகர்களை இரண்டு மணிநேரம் கட்டிப் போடக் கூடியவை. அந்த வகையில் கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் இதேபோன்று ஒரு சர்வைவல் திரில்லர் படமாக வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்திலும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த மலையாள படத்திற்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த போது குணா குகைக்குள் தவறி விழுந்த தங்களது நண்பனை உடன் வந்த நண்பர்கள் போராடிக் காப்பாற்றுவது தான் இந்த படத்தின் கதை. இதே போன்று எக்ஸிட் என்கிற இன்னொரு சர்வைவல் திரில்லர் படம் வரும் மார்ச் 8ம் தேதி வெளியாக இருக்கிறது. காட்டுக்குள் சுற்றி பார்க்க வரும் நான்கு டீன் ஏஜ் இளைஞர்கள் தங்களை அறியாமலேயே ஒரு அமானுஷ்ய பங்களாவிற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த இரவு முழுவதும் அங்கிருந்து அவர்கள் வெளியேற நடத்தும் போராட்டமும் எதிர்கொள்ளும் நிகழ்வுகளும் தான் இந்த படத்தின் கதையாம். இந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என நம்பலாம்.