பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013ல் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் திரிஷ்யம். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலும் பின்னர் சீன மொழியிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. இதில் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடித்திருந்தார். முதல் பாகம் அங்கே பெரிய வரவேற்பு பெறவில்லை.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் மோகன்லாலை வைத்து வெற்றி படமாக கொடுத்தார் இயக்குனர் ஜீத்து ஜோசப். இந்த படம் அதன்பிறகு இந்தியிலும் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியாகி இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் ஹாலிவுட்டை சேர்ந்த பிரபலமான பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை ஆங்கிலம், கொரியா, ஸ்பானிஷ் உள்ளிட்ட 10 மொழிகளில் ரீமேக் செய்து தயாரிக்கும் உரிமையை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து திரிஷ்யம் ரசிகர்கள் குஷியாகி இருக்கின்றனர்.
அதே சமயம் பாலிவுட்டை சேர்ந்தவர்கள் அஜய் தேவ்கன் நடித்துள்ள திரிஷ்யம் படம் தான் ஹாலிவுட்டில் ரீமேக் ஆகிறது என்பது போன்று சோசியல் மீடியாவில் பேச ஆரம்பித்தனர். இதனை பார்த்த மோகன்லால் ரசிகர்கள் இது முழுக்க முழுக்க மோகன்லால் படம் தான். அவருக்குத்தான் இதன் பெருமை சேரும். அஜய் தேவ்கன் இதன் ரீமேக்கில் தான் நடித்துள்ளார்.. தயவுசெய்து அஜய் தேவ்கன் படம் என இதை கூறாதீர்கள் என்று ஒரு விவாதத்தை சோசியல் மீடியாவில் ஆரம்பித்து வைத்துள்ளனர்.