படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருந்த மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் வெளியானது. வித்தியாசமான படங்களை கொடுப்பதற்கு பெயர் பெற்ற இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இந்த படத்தை இயக்கியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் வெளியானபின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்ய தவறியதுடன் வசூலிலும் சரிவை சந்தித்துள்ளது.
இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகின்றன என்று சொல்வதை விட எதிர்மறை விமர்சனங்கள் தான் சோசியல் மீடியாவில் அதிகம் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் மோகன்லால் மற்றும் மம்முட்டி ரசிகர்களுக்கு இடையேயான சண்டையால் தான் மலைக்கோட்டை வாலிபன் படத்தின் வசூலில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்று படத்தின் தயாரிப்பாளர் சிபு பேபி ஜான் கூறியுள்ளார். ஆனால் இவரது கருத்திற்கு நெட்டிசன்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுபற்றி அவர்கள் கூறும்போது, “இவர் சொல்லும் கருத்தில் பத்து சதவீதம் கூட ஏற்றுக் கொள்ள முடியாது என்பதே உண்மை. காரணம் கடந்த மாதம் இதே மோகன்லால் நடிப்பில் நேர் என்கிற திரைப்படம் வெளியானது. மிகக் குறைந்த நாட்களிலேயே இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை செய்தது. அந்த படம் வெளியான சமயத்தில் மம்முட்டி, மோகன்லால் ரசிகர்களுக்கு இடையே போட்டியோ சண்டையோ இல்லாமல் இருந்ததா என்ன? ரசிகர்கள் சண்டையால் ஒரு ஹீரோவின் படம் தோல்வி அடைவதற்கான வாய்ப்பே இல்லை.
ஜெயிலர் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது கூட இயக்குனர் நெல்சனின் பீஸ்ட் படத்தை குறிப்பிட்டு ஒரு கதை தோற்கலாம், ஆனால் இயக்குனர் தோற்க மாட்டார் என்று கூறினார்.. ஆனால் அதற்கு நேர்மாறாக கதை தோற்காது, இயக்குனர் வேண்டுமானால் தோற்க வாய்ப்பு இருக்கிறது என்பதைத்தான் நேர் மற்றும் மலைக்கோட்டை வாலிபன் படங்களின் வசூல் உணர்த்தியுள்ளது” என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.