அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் |
சமீபத்தில் நடிகர் சிரஞ்சீவிக்கு மத்திய அரசு பத்ம விபூஷண் விருது அறிவித்தது. இதனை தொடர்ந்து தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை நேரிலும் சோசியல் மீடியா மூலமாகவும் சிரஞ்சீவிக்கு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரும் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தை தயாரித்தவருமான தில் ராஜு, சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதை பிரம்மாண்ட விழாவாக கொண்டாட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் படங்களின் ரிலீஸ் தேதியை ஒழுங்குபடுத்துவது குறித்து உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார் தில் ராஜு. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, பத்ம விபூஷண் பட்டம் பெற்ற சிரஞ்சீவியை கவுரவிக்கும் விதமாக பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்த தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.