இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? |
மலையாள சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கங்காதரன். கிரஹலட்சுமி புரொடக்ஷன்ஸ் சார்பில் 1977ம் ஆண்டு முதல் படங்களை தயாரித்து வந்தவர். 20க்கும் மேறப்பட்ட மலையாள படங்களை தயாரித்துள்ளார். 'ஒரு வடக்கன் வீரகதா', 'அசுவிண்டே அம்மா', 'தூவல் கொட்டாரம்' உள்ளிட்ட படங்கள் முக்கியமானவை.
1996ல் வெளியான இவரின் 'கானாக்கினாவு', 2001ம் ஆண்டு வெளியான 'சாந்தம்' ஆகிய படங்களுக்கு தேசிய விருது கிடைத்தது. 5 படங்களுக்கு மாநில விருது கிடைத்துள்ளது. தொழிலதிபரான இவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2011ல் கோழிக்கோடு வடக்கு தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு போட்டியிட்டார். மேலும், மாத்ருபூமியின் இயக்குநராகவும் சில வருடங்கள் இருந்தார்.
80 வயதான இவர் கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு காரணமாக ஏற்படும் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். கங்காதரன் மறைவுக்கு கேரள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கங்காதரனின் வாரிசுகள் ஷேனுகா ஜெய்திலக், ஷெக்னா விஜில் மற்றும் ஷெர்கா சந்தீப் ஆகியோரும் திரைப்படத்துறையில் பணியாற்றி வருகின்றனர்.