'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
சமீபத்தில் 2021ல் வெளியான படங்களுக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் சிறந்த அறிமுக இயக்குனர் என்கிற விருதை பெற்றுள்ளார் மலையாள இயக்குனர் விஷ்ணு மோகன். கடந்த 2021ல் மலையாள இளம் நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான மேப்படியான் திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தை நடிகர் உன்னி முகுந்தனே தயாரித்தும் இருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
தற்போது இந்த படத்திற்காக சிறந்த இயக்குனர் விருது பெற்றுள்ள விஷ்ணு மோகன் இந்த படத்தை எடுப்பதற்காக என்னென்ன கஷ்டங்கள் பட்டார் என உன்னி முகுந்தன் உள்ளிட்ட படக்குழுவினர் பாராட்டி வருகின்றனர். அது மட்டுமல்ல, விஷ்ணு மோகனுக்கு வரும் செப்டம்பர் 3ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கேரள பிஜேபி தலைவர்களில் ஒருவரான ஏஎன் ராதாகிருஷ்ணனின் மகள் அபிராமியை இவர் திருமணம் செய்ய இருக்கிறார். திருமண வேலைகளை கவனித்து வந்த நிலையில் தற்போது தனக்கு சிறந்த அறிமுக இயக்குனருக்கான தேசிய விருதும் கிடைத்துள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் விஷ்ணு மோகன்.