அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி | டிரெயின் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | கிரிசில்டா குழந்தைக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும்: கோர்ட்டில் ரங்கராஜ் மனு | பிளாஷ்பேக்: தோல்வி பயத்தில் டைட்டிலை மாற்றிய டி.ஆர்.மகாலிங்கம் | சிக்கலில் ‛காந்தா' : தடை கோரி வழக்கு | கவுரி கிஷனுக்கு இதுவரை குரல் கொடுக்காத திரிஷா | 25வது நாளை கொண்டாடிய பைசன் | மகனை வாழ்த்தாத அப்பா : பேரனை உற்சாக படுத்தாத தாத்தா | மன்னிக்க முடியாதது : ஹேமமாலினி கோபம் | கொரியன் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் ராஷ்மிகா மந்தனா |

தெலுங்கில் பான் இந்தியா படமாக தயாராகிறது 'ஸ்பார்க்'. அதிக பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தில் விக்ராந்த், மெஹ்ரீன் மற்றும் ருக்ஷார் தில்லான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். குரு சோமசுந்தரம் , நாசர், சுஹாசினி, வெண்ணிலா கிஷோர், சத்யா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், அன்னபூர்ணம்மா, ராஜா ரவீந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹேசம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.
டெப் ப்ராக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகன் விக்ராந்த் இதில் ஹீரோவாக அறிமுகமாகிறார். முதல் படத்திலேயே அதிரடி ஆக்ஷன் ஹீரோ ஆகியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை மெஹ்ரின் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமாக தயாராகி உள்ளது. தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது.




