தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

நெல்சன் திலீப்குமார் தற்போது ரஜினிகாந்த்தை வைத்து இயக்கியுள்ள தனது நான்காவது படம் ‛ஜெயிலர்'. நான்கு படங்களிலும் அனிருத் தான் தொடர்ந்து இசையமைத்து வருகிறார். நான்கு படங்களிலும் ஏதோ ஒரு பாடல் ரசிகர்களை ஆட்டிப்படைக்கும் பாடலாக வெளியாகி விடுவது நெல்சனுக்கு கிடைத்த ஜாக்பாட் என்று சொல்லலாம். அந்த வகையில் ஜெயிலர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காவாலா என்கிற பாடலும் அதற்கு தமன்னா ஆடும் வித்தியாசமான நடன அசைவுகளுடன் கூடிய நடனமும் 6 முதல் 60 வயது உள்ளவர்களையும் வசிகரித்துள்ளது. இதுவரை வெளியான பாடல்களிலேயே அதிக அளவில் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி இருக்கும் பாடல் என்றால் அது இதுவாகத்தான் இருக்கும்.
ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ள கன்னட நடிகர் சிவராஜ்குமாரையும் இந்த காவாலா ஜுரம் விட்டு வைக்கவில்லை. சமீபத்திய ஒரு பேட்டியின்போது தொகுப்பாளர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சில நொடிகள் காவலா பட பாடல் ஸ்டெப்ஸ் ஆடிக்காட்டி அசத்தினார் சிவராஜ்குமார். ஆனாலும் இந்த நடனம் தமன்னாவுக்கு தான் மிக பொருத்தமாக இருக்கும் என்று தனது பாராட்டுகளையும் தமன்னாவிற்கு அவர் தெரியப்படுத்தினார்.




