பிளாஷ்பேக் : தமிழ் மக்களை டிஸ்கோ பைத்தியம் பிடிக்க வைத்த படம் | பிளாஷ்பேக் : நல்லதங்காள் போன்று பெண்களை கதற வைத்த 'பெண் மனம்' | நிஜ சிங்கத்துடன் நடித்த ஷ்ரிதா ராவ் | மோகன்லால், பகத் பாசிலை பின்னுக்குத் தள்ளி கல்யாணி பிரியதர்ஷன் | 2025 : 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட் | அனுஷ்கா வராதது அவர் விருப்பம் : இயக்குனர் கிரிஷ் பதில் | தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை |
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான 2018 என்கிற திரைப்படம் வெளியாகி கேரளாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றுள்ளதுடன் வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. இதுவரை 160 கோடிக்கு மேல் உலக அளவில் வசூலித்துள்ள இந்த படம் கேரளாவில் மட்டும் 80 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இந்த படத்தில் டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், வினீத் சீனிவாசன், ஆசிப் அலி, நரேன் உள்ளிட்ட பல மலையாள நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் டொவினோ தாமஸ் கதையின் முக்கிய பாத்திரத்தில் நடித்து இருந்தார். மிகப்பெரிய அளவில் பாராட்டுகளையும் பெற்றார். ஆனால் இந்த படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் தன்னை அழைத்தபோது முதலில் தான் நடிக்க மறுத்துவிட்டேன் என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் டொவினோ தாமஸ்
இதுகுறித்து அவர் கூறும்போது, “கடந்த 2018ல் கேரளாவில் மிகப்பெரிய அளவில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது நானும் சக மனிதனாக மீட்பு பணிகளில் இறங்கி எனது பங்களிப்பை அளித்தேன். ஆனால் என்னை மிகப் பெரிய ஹீரோ போல அந்த சமயத்தில் சித்தரித்தார்கள். சினிமா நடிகன் என்பதாலேயே எனக்கு அப்படி தனி நபராக பாராட்டப்படுவதில் விருப்பமில்லை என்பதை நான் தெரிவித்தேன்.
ஆனால் அந்த சமயத்தில் நான் தெரிவித்த கருத்து வேறு விதமாக புரிந்து கொள்ளப்பட்டு அதற்கு வருத்தப்படும் விதமாக எதிர் கருத்துகளும் வந்தன. அதனால் இந்த படத்தில் இப்போது நடிப்பது சரியாக இருக்காது என நான் இயக்குனரிடம் கூறினேன். ஆனால் அவர் என்னை கன்வின்ஸ் செய்து இந்த படத்தில் நடிக்க வைத்தார். அப்படி அவர் செய்திருக்காவிட்டால் ஒரு அற்புதமான படத்தில் நடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டிருப்பேன் என்பதை இப்போது உணர்கிறேன்” என்று கூறியுள்ளார் டொவினோ தாமஸ். .