ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா ஹிந்தி மற்றும் தெலுங்கில் அதிரடி ஆக்சன் படங்களையும், குறிப்பாக அண்டர்வேர்ல்ட் தாதாக்கள் படங்களையும் படமாக்குவதில் வித்தகர். கடந்த சில வருடங்களாக அந்த பாதையில் இருந்து மாறி கவர்ச்சி படங்களையும், சிலர் வாழ்க்கையை பற்றி மட்டமாக சித்தரிக்கும் வகையில் சுயசரிதை படங்களையும் எடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கு முன்னணி நடிகர் பவன் கல்யாண் வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாக பவர்ஸ்டார் என்கிற பெயரில் படம் எடுத்து சர்ச்சையில் சிக்கினார்.
இந்த நிலையில் தற்போது ஆந்திர முதல்வர் ஓய்.எஸ்.ஆர் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கையை மையப்படுத்தி வியூகம் என்கிற பெயரில் புதிய படத்தை இயக்கி வருகிறார் ராம்கோபால் வர்மா. இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் அஜ்மல் நடிக்கிறார். அவரது மனைவியாக நடிகை மானஸா ராதாகிருஷ்ணன் நடிக்கிறார்.
இது ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு என்பதைவிட தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு ஆந்திர அரசியலில் ஜெகன்மோகன் ரெட்டி எதிர்கொண்ட சவால்களையும் சங்கடங்களையும் உண்மைக்கு பக்கத்தில் இருந்து சொல்லப் போவதாக கூறியுள்ளார் ராம் கோபால் வர்மா.