பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடித்திருந்த வாத்தி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். மாணவர்கள் ஆசிரியர் பின்புலத்தில் உருவாகியிருந்த இந்த படம் தமிழில் டீசன்டான வெற்றியும், தெலுங்கில் ஓரளவு நல்ல வசூலையும் பெற்றது.
இந்த நிலையில் இயக்குனர் வெங்கி அட்லூரி அடுத்ததாக நடிகர் துல்கர் சல்மானை வைத்து படம் இயக்குவதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த கூட்டணி குறித்தும் படம் குறித்தும் இயக்குனர் வெங்கி அட்லூரி சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
வாத்தி படத்தை முடித்துவிட்டு மீண்டும் தெலுங்கில் நுழைவதற்கு சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதேபோல சீதாராமம் படத்திற்கு பிறகு தெலுங்கில் ஒரு நல்ல படத்தில் நடிப்பதற்காக துல்கர் சல்மானும் எதிர்பார்த்து கொண்டிருந்தார். இந்த சமயத்தில் தான் என்னுடைய படத்தில் அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. துல்கர் சல்மானை பொறுத்தவரை அவர் தென்னிந்திய மொழிகளிலும் மற்றும் ஹிந்தியிலும் ஏற்கனவே பிரபலமானவர். அதுமட்டுமல்ல இந்த படத்தின் கதையும் வட இந்தியாவுடன் தொடர்புடையது என்பதால் இதை ஒரு பான் இந்தியா படம் என்று கூட சொல்லலாம்” என்று கூறியுள்ளார் வெங்கி அட்லூரி.




