பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தமிழில் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆரம்பித்தது. வழக்கம் போல இந்த ஐந்தாவது சீசனையும் நடிகர் மோகன்லால் தான் தொகுத்து வழங்குகிறார். ஈஸ்டர் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோகன்லால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவரின் அடாவடித்தனத்தால் பாதியிலேயே நிகழ்ச்சியை நிறுத்தும்படி கூறியது போட்டியாளர்களிடம் மட்டுமல்ல, பார்வையாளர்களிடமும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ள அகில் மாறார் என்பவர் மட்டும் துவக்கத்தில் இருந்தே சக போட்டியாளர்களிடம் அடாவடியாக நடந்து வருகிறார். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில் சக போட்டியாளரான சாகர் என்பவரை தரம் குறைந்த வார்த்தைகளா திட்டி உள்ளார்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோகன்லால் பேசும்போது, அகில் மாறாரின் நடவடிக்கைகளை கண்டித்ததுடன் அவரை மன்னிப்பு கேட்கும்படியும் வலியுறுத்தினார். அதுமட்டுமல்ல அவர் வசம் வைத்திருந்த கேப்ஷன் பேண்டை கழற்றி சாகரிடம் கொடுக்குமாறு கூறினார். போனால் போகிறது என்கிற ரீதியில் மன்னிப்பு கேட்ட அகில் மாறார், தன் கையில் இருந்த கேப்ஷன் பேண்டை கழட்டி சாகரிடம் தூக்கி எறிந்தார். தன் கண் முன்னாலேயே அதில் மாறார் இப்படி நடந்து கொண்டது மோகன்லாலின் கோபத்தை தூண்டியது.
“இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜெய்சல்மீரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு நான்கு மணி நேரம் காரில் பயணித்து விமானம் ஏறி அங்கிருந்து நேராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடலாம் என மகிழ்ச்சியுடன் வந்த என்னை, நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள்.. போதும் நான் கிளம்புகிறேன்” என்று கூறிய மோகன்லால், உடனே “லைவை கட் செய்யுங்கள்” என்று கூறினார். மோகன்லால் இப்படி கோபப்படுவார் என எதிர்பாராத போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து வழக்கம் போல இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தினார் மோகன்லால்.