தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? | பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு விஜய்சேதுபதி பதில் | '3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? |
கன்னட திரை உலகில் அதிரடியான படங்களை இயக்குவதற்கும் அதிரடி நடிப்பிற்கும் பெயர் போனவர் உபேந்திரா. இவரும் கிச்சா சுதீப்பும் இணைந்து நடித்துள்ள படம் கப்ஜா. இந்த படத்தை சந்துரு என்பவர் இயக்கியுள்ளார். பான் இந்தியா படமாக வரும் மார்ச் 17ல் இந்த படம் வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் பெங்களூரு, சென்னை, தற்போது ஐதராபாத் என சீரான இடைவெளியில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்ற கப்ஜா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் உபேந்திரா கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அவர் பேசும்போது மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் பற்றி குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “புனித் தனது படத்தை இயக்குமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். அந்த சமயத்தில் நான் பிஸியாக இருந்ததால் அவரது படத்தை இயக்க முடியவில்லை. ஆனால் கடைசிவரை எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமலேயே அவர் சென்று விட்டார். இருந்தாலும் அவரிடம் மிஸ் பண்ணிய அந்த வாய்ப்பை ஈடு செய்யும் விதமாக அண்ணன் சிவராஜ்குமாரை வைத்து நிச்சயமாக நான் ஒரு படம் இயக்குவேன்” என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார் உபேந்திரா.
இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் பவன் கல்யாணுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் தனது ஜனசேனா கட்சியின் கூட்டங்கள் சிலவற்றில் தொடர்ந்து கலந்துகொள்ள வேண்டி இருந்ததால் இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று கடிதம் மூலம் தனது வருத்தத்தை தெரிவித்துள்ள பவன் கல்யாண், உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் உள்ளிட்ட படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.