'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

பஹத் பாஸில் நடித்த அன்னயும் ரசூலும், துல்கர் சல்மான் நடித்த கம்மட்டிப்பாடம் ஆகிய படங்களை இயக்கியவர் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ் ரவி. அதையடுத்து 2018ல் நிவின்பாலி நடிப்பில் துறமுகம் என்கிற படத்தை துவங்கி படப்பிடிப்பையும் ஆரம்பித்தார் ராஜீவ் ரவி. பொதுவாக ராஜீவ் ரவியின் படங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை நடைமுறைகளை சொல்லும் விதமாக அமைந்திருக்கும். அந்தவிதமாக துறைமுகம் பகுதியையும் துறைமுக அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள், அந்தப்பகுதியை சார்ந்த மக்கள் ஆகியோரை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.
ஆனால் இந்த படம் துவங்கப்பட்டு பல்வேறு தடங்கல்களை சந்தித்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது. ஆனால் சில பிரச்சினைகள் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படாமலேயே இருந்தது. படம் துவங்கி 5 வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது ஒருவழியாக வரும் மார்ச் 10ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த வருடம் நிவின்பாலி நடிப்பில் வெளியான படவேட்டு, மகாவீர்யர், சாட்டர்டே நைட் ஆகிய மூன்று படங்களும் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் இந்த வருடம் அவரது முதல் படமாக வெளியாக இருக்கும் இந்த துறமுகம் அவரை சரிவிலிருந்து மீட்கும் என நம்பலாம்.




