ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்களை விட சில குறிப்பிடத்தக்க சின்ன பட்ஜெட் படங்கள் சூப்பர் ஹிட்டாகி வருகின்றன. அதற்கு தமிழில் சமீபத்திய உதாரணம் பிரதீப் ரங்கநாதனின் ‛லவ் டுடே' படம். இந்தப்படம் தமிழில் 7 முதல் 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.100 கோடி வசூலை அள்ளியது. அதேப்போன்று கன்னடத்தில் வெளியான காந்தார படமும் ரூ.400 கோடி வசூலை கடந்து அசத்தியது. இப்போது மலையாளத்தில் அப்படி ஒரு சாதனை நிகழ்ந்துள்ளது.
மலையாளத்தில் புதுமுக இயக்குனர் ஜித்து மாதவ் இயக்கத்தில் பிப்., 3ல் வெளியான படம் ‛ரொமான்ஜம்'. சவுபின் ஷாகிர், அர்ஜூன் அசோகன், செம்பான் வினோத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காமெடி கலந்த ஹாரர் படமாக வெளிவந்த இந்தப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உலகம்முழுக்க ரூ.50 கோடி வசூலை கடந்து சாதித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 33 கோடியும், வெளிநாடுகளில் 17 கோடியும் வசூலித்து சூப்பர் ஹிட்டாகி உள்ளது.
முன்னதாக இந்தப்பட கதையை நிறைய பேரிடம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜித்து. ஆனால் பலரும் நிராகரிக்க, இந்த படத்தை துணிந்து எடுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர் தயாரிப்பாளர்கள் ஜான்பால் ஜார்ஜ் மற்றும் கிரீஷ் கங்காதரன்.