நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் அய்யப்பனும் கோஷியும். பிரித்விராஜ், பிஜுமேனன் இணைந்து நடித்த இந்த படத்தை மறைந்த இயக்குனர் சாச்சி இயக்கியிருந்தார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 68 வது தேசிய விருது பட்டியலில் இந்த படம் மூன்று விருதுகளை வென்றுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஒன்றில் நடித்த நடிகர் வினீத் தட்டில் டேவிட் என்பவர் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார். மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற அங்கமாலி டைரீஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் இந்த வினீத் டேவிட்..
போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி வினீத் டேவிட்டுக்கும், அலெக்ஸ் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. நேற்று இரவு வினித்தின் வீட்டிற்கு அலெக்ஸ் சென்றபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வினீத் தன்னிடம் இருந்த கத்தியால் அலெக்ஸை தாக்கியதில் அவருக்கு கைகளில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின்படி திருச்சூர் போலீசார் நேற்று வினீத் தட்டில் டேவிட்டை கைது செய்தனர்.