ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மலையாள திரையுலகில் மிகப்பிரமாண்டமான உருவான வரலாற்று படங்களான பழசிராஜா மற்றும் மரைக்கார் உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு துவங்கி இரண்டு வருட காலகட்டத்திலேயே மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டனர். ஆனால் பிரித்விராஜ் நடிப்பில் இயக்குனர் பிளஸ்சி டைரக்சனில் உருவாகி வந்த ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஐந்து வருடங்களை எட்டிய நிலையில் சமீபத்தில் முடிவடைந்துள்ளது. ஆடுஜீவிதம் என்கிற நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்த கதையில் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் நஜீப் என்கிற கதாபாத்திரத்தில் பிரித்திவிராஜ் நடித்துள்ளார். கதாநாயகியாக அமலாபால் நடிக்கிறார்.
இந்த படத்தின் கதை கேரளா மற்றும் அரபு நாடியில் உள்ள பாலைவன பகுதிகளில் விதவிதமான காலகட்டங்களில் நடைபெறும் விதமாக எழுதப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல பிரித்விராஜுக்கும் வித்தியாசமான தோற்றங்களில் நடிக்க வேண்டி இருந்தது. அப்படி இடைவெளி விட்டுவிட்டு நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜோர்டன் நாட்டில் நடைபெற்றபோது கொரோனா தாக்கம் காரணமாக மீண்டும் தடங்கலை சந்தித்தது.
இந்த நிலையில் இந்த வருட துவக்கத்தில் மீண்டும் ஜோர்தான் சென்று மீதி காட்சிகளை படமாக்கி திரும்பிய ஆடுஜீவிதம் படக்குழுவினர் சமீபத்தில் கேரளாவில் உள்ள ராணி என்கிற பகுதியில் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும், 14 வருடங்களாக இந்த கதையில் பயணித்து, ஐந்து வருடங்களாக படப்பிடிப்பில் கடுமையான உழைப்பை கொடுத்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து, ஒரே நோக்கில் இந்த படத்தை இயக்குனர் பிளஸ்சி முடித்துள்ளார் என்றும் கூறியுள்ளார் நடிகர் பிரித்விராஜ்.