ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

மம்முட்டி நடிப்பில் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு படம் அடுத்தடுத்து அதன் நான்கு பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் ஐந்தாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. நான்கு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் கே.மது தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் வில்லன்களில் ஒருவராக கன்னட நடிகர் ஹரிஷ் ராஜ் என்பவர் நடித்து வருகிறார்.
கன்னடத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து வரும் இவர் ஒரு இயக்குனரும் கூட. நான்கு படங்களுக்கு மேல் இயக்கியுள்ள இவர் தற்போது மலையாள படத்தில் வில்லனாக நடிப்பது குறித்து கூறும்போது, மம்முட்டி போன்ற மிகப்பெரிய நடிகருடன் நடிப்பது ஒரு பக்கம் சந்தோசம் என்றால் இந்த படத்தில் எனது கதாபாத்திரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது, கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லக்கூடியது என்பதில் கூடுதல் சந்தோசம். நிச்சயமாக மலையாள ரசிகர்கள் என்னை வில்லனாக ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.