‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் | மகேஷ்பாபு உறவு நடிகையின் கார் மீது பஸ் மோதல் : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் | பிளாஷ்பேக் : நிஜமான தூக்குக் கயிற்றை மோகன்லால் கழுத்தில் மாட்டிய இயக்குனர் | இப்ப மிருணாள் தாக்கூர் தான் ஹாட் | ரூ.60 கோடி பண மோசடி : நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு | என் இதயம் நொறுங்கிவிட்டது : நாய்களுக்காக கண்ணீர் விட்டு கதறிய நடிகை சதா | தர்ஷனுக்கு வழங்கிய ஜாமின் ரத்து : சுப்ரீம் கோர்ட் உத்தரவு | அரங்கம் அதிர, விசிலு பறக்க... வெளியானது கூலி : ரசிகர்கள் கொண்டாட்டம் | ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் |
மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற த்ரிஷ்யம்-2 படத்தை அதே பெயரில் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் ரீமேக் செய்து எடுத்தனர். முதல் பாகத்தில் இடம்பெற்ற அதே நட்சத்திர கூட்டணியை வைத்து, இந்த முறை இயக்குனர் ஜீத்து ஜோசப்பே தெலுங்கிலும் இயக்கினார். மலையாளத்தை போலவே தெலுங்கிலும் இந்தப்படத்தை ஓடிடியில் வெளியிடலாம் என்கிற முடிவோடு தான் எடுத்து முடித்தார்கள். ஆனால் அதேசமயம் அசுரன் ரீமேக்காக வெங்கடேஷ் நடித்த நரப்பா படத்தை முதலில் வெளியிட முடிவு செய்ததால் த்ரிஷ்யம்-2 ரிலீஸை தள்ளி வைத்தனர்.
அதேபோல ராணா, சாய்பல்லவி நடிப்பில் உருவான விராட பர்வம் படம், அது தயாரான சமயத்திலேயே தியேட்டர் ரிலீஸ் தான் என்கிற முடிவிலேயே எடுக்கப்பட்டது. இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவித்தும் கொரோனா தாக்கம் காரணமாக அது தள்ளிப்போனது.
இந்த இரண்டு படங்களையும் சுதீர் வர்மா என்கிற தயாரிப்பாளர் தான் தயாரித்துள்ளார். இந்தநிலையில் தற்போது த்ரிஷ்யம்-2 படத்தை தியேட்டர்களில் வெளியிட ஆர்வம் காட்டி அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளாராம் சுதீர் வர்மா. அதேசமயம் விராட பர்வம் படத்தை ஓடிடியில் வெளியிடலாம் என்கிற முடிவுக்கும் வந்துள்ளாராம். தயாரிப்பாளர் இப்படி உல்டாவாக முடிவெடுத்துள்ளதால் வெங்கடேஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்க, ராணாவின் ரசிகர்களாக காற்றுப்போன பலூன் போல ஆகிவிட்டார்களாம்.