இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுக்கு இந்த கொரோனா இரண்டாவது அலை ஆரம்பித்த சமயத்தில் இருந்து நல்ல காலம் பிறந்து விட்டது என்றே சொல்லலாம். அந்த சமயத்தில் வெளியான அவரது கிராக் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து அவரது இன்னொரு படமான கில்லாடி ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் தற்போது சுதீர் வர்மா டைரக்ஷனில் லாயராக நடித்து வருகிறார் ரவி தேஜா.
இந்த படத்திற்கு இப்போது ராவணாசுரன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரவிதேஜா அமர்ந்திருப்பது போன்றும், அவரது தலையின் பின்னால் ஒன்பது தலைகள் இருப்பது போன்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. பொதுவாக ரோக்கள் எதிர்மறையான கதாப்பாத்திரத்தின் பெயரில் நடிப்பது ரொம்பவே குறைவுதான். இந்த நிலையில் ரவிதேஜா ஹீரோவாக நடித்தாலும் அந்த படத்திற்கு ராவணாசுரன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.