அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு தென்னிந்திய ரசிகர்களிடமும் மிகப்பெரிய அளவில் ஈர்ப்பு இருக்கிறது. அந்தவகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு பாடலுக்கு மட்டும் சன்னி லியோனை ஆடவைத்து ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தார்கள். தற்போது மலையாள சினிமாவில் இன்னும் ஒருபடி மேலே போய் சன்னி லியோனின் முழு நடிப்புத் திறமையையும் வெளிக்கொண்டு வரும் விதமாக அவரை கதாநாயகியாக்கி அழகு பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். அந்த வகையில் ஏற்கனவே ரங்கீலா என்கிற படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வந்த சன்னி லியோன் அது பாதியில் நிற்கும் நிலையில், தற்போது ஷீரோ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அவர் சில சண்டைக் காட்சிகளிலும் நடிக்க வேண்டி இருந்தது. சன்னி லியோனை ஒப்பந்தம் செய்யும்போதே இயக்குனரை தனியாக அழைத்த அவரது மேனேஜர், சண்டைக்காட்சிகளில் சன்னி லியோன் நடிக்க ஆர்வம் காட்டுவார், ஆனால் நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.. நீங்கள் அதற்காக டூப் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்று கூறினாராம். ஆனால் இதை தெரிந்து கொண்ட சன்னி லியோன், தானே ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பேன் என்று கூறியதோடு அதற்காக முன்கூட்டியே கேரளா வந்து ஒரு வாரம் ரிகர்சல் செய்து பயிற்சி எடுத்துக் கொண்டாராம். அதுமட்டுமல்ல சண்டைக் காட்சிகளில் மிகச்சிறப்பாக நடித்தும் அசத்தினாராம்