ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கதாநாயகியாக அறிமுகமாகி மூன்று ஆண்டுகள் ஆகப் போகிறது. பிரபலமடைந்துவிட்டாலும் இன்னமும் ஹிந்தியில் முன்னணி கதாநாயகியாக அவரால் முன்னேற முடியவில்லை என்பதுதான் உண்மை.
ஸ்ரீதேவி தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து இங்கு பிரபலமான பின்புதான் மும்பைக்குச் சென்று அங்கு பிரபலமாகி நம்பர் 1 இடத்தைப் பிடித்தார். ஹிந்தியில் இன்னும் பெரிய அளவில் பேசப்படாத ஜான்வியை எப்படியாவது தெலுங்கில் அறிமுகப்படுத்திட வேண்டும் என தெலுங்குத் தயாரிப்பாளர்கள் விடாமல் முயற்சித்து வருகிறார்கள்.
தற்போது ஒரே சமயத்தில் மூன்று தயாரிப்பு நிறுவனங்கள் அவரைத் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்களாம். மகேஷ் பாபு, ராம் சரண் ஆகியோரது படங்களும் அதில் அடக்கம்.
தென்னிந்திய மொழிகளில் அறிமுகமானால் ஹிந்தியில் ஓரம் கட்டப்பட்டு விடுவோமோ என ஜான்வி யோசிக்கிறார் போலிருக்கிறது. எப்படியாவது அவருக்கு அதிக சம்பளம் கொடுத்தாவது தங்களது படங்களில் நடிக்கவைத்துவிட வேண்டும் என தயாரிப்பாளர்கள் போட்டி போடுகிறார்களாம்.