'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், ரத்த சரித்திரம், விவேகம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் வில்லனாக நடித்தார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்தநிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற படத்தை இயக்கி, இயக்குனராக அறிமுகமானார் நடிகர் பிரித்விராஜ். பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயை முதன்முதலாக மலையாள திரையுலகிற்கு அழைத்து வந்து அந்தப்படத்தின் வலுவான வில்லன் கதாபாத்திரத்தில், நடிக்க வைத்தார் பிரித்விராஜ்..
இந்தநிலையில் தற்போது ஷாஜி கைலாஷ் டைரக்சனில் பிரித்விராஜ் நடித்து வரும் கடுவா என்கிற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விவேக் ஓபராய். லூசிபர் படத்தில் பிரித்விராஜும் நடித்திருந்தாலும் ,ஓரிரு காட்சிகளில் மட்டுமே விவேக் ஓபராயுடன் சேர்ந்து நடித்திருந்தார். ஆனால் கடுவா படத்தில் பிரித்விராஜூக்கு வில்லனாக படம் முழுதும் நடிக்க இருக்கிறாராம் விவேக் ஓபராய். இந்த கேரக்டரில் நடிக்க அவரை இயக்குனர் ஷாஜி கைலாஷிடம் சிபாரிசு பண்ணியதே பிரித்விராஜ் தானாம்.