பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் |

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஹிருத்திக் ரோஷன். இவர் நடித்து கடந்த 2006ம் ஆண்டில் இவரது தந்தை ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் கிரிஷ் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இதன் அடுத்த பாகங்கள் இவர்கள் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்றன.
இந்த நிலையில் ராகேஷ் ரோஷன் அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "ஹிருத்திக் 25 வருடத்திற்கு முன்பு நான் உன்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினேன். இப்போது ஹிருத்திக் ரோஷன் இயக்குனராக கிரிஷ் 4ம் பாகத்தின் மூலம் அறிமுகமாகிறார்'' என அறிவித்துள்ளார்.
இந்த படத்தை ஆதித்யா சோப்ரா மற்றும் ராகேஷ் ரோஷன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். பிரமாண்ட படமாக பெரிய பட்ஜெட்டில் கிரிஷ் 4 தயாராகிறது.