ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட திரையுலகில் ஒரு சில படங்களில் நடித்த நிலையில் தெலுங்கு திரை உலகிற்கு சென்று முன்னணி நடிகையாக மாறினார். அதைத்தொடர்ந்து தமிழ், அப்படியே ஹிந்தி வரை சென்று பான் இந்திய நடிகையாகவும் மாறிவிட்டார். அதே சமயம் தன்னை அறிமுகப்படுத்திய கன்னடத்தில் கடந்த ஆறு ஏழு வருடங்களாக மீண்டும் அவர் படம் நடிக்கவே இல்லை. அது மட்டுமல்ல, கன்னட சினிமா தொடர்பான விழாக்களில் கூட கலந்து கொள்வதில்லை. அவ்வளவு ஏன் கன்னட திரை உலகை பற்றியே அவர் எங்கும் வாய் திறப்பது இல்லை.
இந்த நிலையில் தான் சமீபத்தில் கர்நாடக சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக ராஷ்மிகா மந்தனாவுக்கு கர்நாடக அரசு சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் அந்த விழாவில் கலந்து கொள்வதை புறக்கணித்து விட்டார் என்று கூறி மிகப் பெரிய சர்ச்சை வெடித்தது. கர்நாடக எம்எல்ஏ ஒருவர் ராஷ்மிகாவின் மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். இதனை தொடர்ந்து கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் ராஷ்மிகாவின் இந்த போக்கை எச்சரிக்கும் விதமாகவும் தற்போது கன்னட திரை உலகை சேர்ந்தவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாகவும் தன பங்கிற்கு சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார்.
“இது என்னுடைய நிகழ்ச்சி அல்ல.. உங்களுடையது.. வெறும் இருபது நபர்கள் மட்டும்தான் சினிமாவா? அரசாங்கம் உங்களுக்கு தேவையான ஆதரவையும் அனுமதியையும் வழங்கவில்லை என்றால் உங்களால் எந்த படங்களையும் உருவாக்க முடியாது. எங்கே நட்டுகளையும் போல்ட்டுகளையும் டைட் பண்ண வேண்டும் அதற்கு யாரை அணுக வேண்டும் என்று எனக்கும் தெரியும். இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹொசா மரிகுடி கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் துணை முதல்வர் சிவகுமாரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “சில பேர் இங்கே ஸ்க்ரூவை டைட் பண்ண போவதாக சொல்கிறார்கள். கடவுள் எங்களை காப்பார். கடவுள் எப்போதும் எங்கள் அனைத்து கலைஞர்களுக்கும் துணையாக நிற்பார்” என்று கூறியுள்ளார்.
இதில் நடிகை ராஷ்மிகாவுக்கு ஆதரவு என்கிற நிலை ஒரு பக்கம் இருந்தாலும் கங்கனா பிஜேபி எம்பி என்பதால் கட்சி ரீதியாக காங்கிரஸ் துணை முதல்வர் சிவகுமாருக்கு பதிலடி கொடுக்கும் வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொண்டார் என்று தான் திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பேசிக் கொள்கிறார்கள்.