2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் |

ஷீரடி: பாலிவுட் நடிகர் நடிகர் ஷாரூக்கான் மற்றும் அவரது மகள் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்
மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவர். அதுபோல் அரசியில் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் வருவது வழக்கம்.
அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மற்றும் அவரது மகள் சுஹானா கான் சாய்பாபா கோயிலுக்கு வருகை தந்தனர். அங்கு அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுடன் நடிகரின் மேனேஜர் பூஜாத்தலானியும் உடனிருந்தார்.
கோயிலுக்கு நுழையும் போது அவரது ரசிகர்கள் நடிகரை பார்த்ததும் அவரை பார்த்து கையசைத்தனர். ஒரு சிலர் நடிகரிடம் பேசினர்.
நடிகரின் கோயில் தரிசனம் குறித்து நெட்டிசன்கள் கலவையான விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.
இவர் நடித்துள்ள டன்கி படம் வரும் 21-ம் தேதி வெளியாகிறது. அதற்காக அவர் கோயிலுக்கு வருகைதந்துள்ளார். இதே போன்று இந்தாண்டு வெளியான பதான் மற்றும் ஜவான் படங்கள் வெளியான போதும் அவர் கோயில்களுக்கு சென்று வந்துள்ளார் என ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.