லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலரது நடிப்பில் அட்லி இயக்கிய படம் ஜவான். பாலிவுட்டில் அவர் இயக்கிய இந்த முதல் படமே ஆயிரம் கோடி வசூலை கடந்ததால் அடுத்தபடியாக மீண்டும் ஷாருக்கான் - விஜய்யை இணைத்து ஒரு படம் இயக்கப் போவதாக கூறி வருகிறார் அட்லி.
இப்படியான நிலையில் தற்போது ஹாலிவுட் சினிமாவில் கொடுக்கப்படும், ஹாலிவுட் கிரியேட்டிவ் அலைன்ஸ் விருதுக்கான தேர்வு பட்டியலில் இந்த ஜவான் படம் இடம் பிடித்திருக்கிறது. இதன் மூலம் முதன்முதலாக ஹாலிவுட்டில் இடம்பிடித்த தமிழ் இயக்குனர் ஆகியிருக்கிறார் அட்லி. இப்படி உலகளாவிய சிறந்த படங்களுக்கான ஹாலிவுட் கிரியேட்டிவ் அலைன்ஸ் தேர்வு பட்டியலில் இந்தியா சார்பில் அட்லியின் ஜவான் படம் இடம்பெற்றதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.