லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் அக்ஷய்குமார். அவர் கனடா நாட்டின் குடியுரிமையை கடந்த 2000ம் ஆண்டில் பெற்றார். அதற்குப் பிறகு இந்திய நாட்டின் தேசப்பற்றை வெளிப்படுத்தும் பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் இந்தியக் குடியுரிமை இல்லாதவர் என சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
அவரை அக்ஷய்குமார் என அழைத்ததை விட கனடியன் குமார் என்றுதான் ரசிகர்கள் அதிகமாகக் கிண்டலடித்தார்கள். இந்நிலையில் தற்போது இந்தியக் குடியுரிமையைப் பெற்றுவிட்டதாக அக்ஷய்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
“இதயமும், குடியுரிமையும் இந்தியன்… இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள், ஜெய்ஹிந்த்,” எனக் குறிப்பிட்டு இந்தியக் குடியுரிமை பெற்றதற்கான சான்றிதழையும் பதிவிட்டுளளார்.
தமிழில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த '2.0' படத்தில் வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். அவரது நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த 'ஓஎம்ஜி 2' சுமாரான வெற்றியுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.