பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் | எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'? | கோவாவில் கூடிய 90 ஸ்டார்ஸ் : ஆட்டம், பாட்டம்,பார்ட்டி என கொண்டாட்டம் | 25 நாட்களைக் கடந்த '3 பிஹெச்கே, பறந்து போ' | 100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் |
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோரது ஒரே மகள் ஆராத்யா பச்சன். சில யு டியூப் சேனல்களை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். 11 வயதான மைனர் பெண்ணான தன் மீது சில யு டியூப் சேனல்கள் தன்னுடைய உடல்நலம் குறித்து ஆதாராமற்ற வதந்திகளை வெளியிடுவதாக அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பிரபங்களை 'டிரோல்' என்ற பெயரில் கிண்டலடிப்பது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. அவர்களின் குழந்தைகளைப் பற்றிக் கூட இப்படி நாகரீகமற்ற முறையில் 'டிரோல்' செய்து வருகிறார்கள்.
ஆராத்யா வழக்கில் நீதிமன்றம் தரப் போகும் தீர்ப்பு நாகரீகமற்ற முறையில் பதிவிடும் சிலருக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவில் இருக்க வேண்டும் என்றுதான் பலரும் எதிர்பார்க்கிறார்கள்.