ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பாலிவுட்டில் 'ஹாய் இஜாக் வஜா' உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஆர்த்தி மிட்டல். பரமர்க்காஸ், சோட்டி சர்தார்னி, கிரைம் பேட்ரல் உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். வெர்ஜின் பாஸ்கர், ஜிஎஸ்டி வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.
தற்போது ஆர்த்தி திரைப்படங்களுக்கு நடிகர், நடிகைகளை தேர்வு செய்து கொடுக்கும் காஸ்ட்டிங் டைரக்டராக பணியாற்றி வருகிறார். ஆர்த்தி வாய்ப்பு கேட்டு வரும் இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக வந்த தகவலை தொடர்ந்து மும்பை போலீசார் தனிப்படை அமைத்து ஆர்த்தியை உரிய ஆதாரத்துடன் பிடிக்க திட்டமிட்டனர்.
அதன்படி ஆர்த்தியை அணுகிய போலீசார் தங்களுக்கு 2 அழகிகள் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அவரும் 60 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு 2 இளம் பெண்களை அனுப்பி வைத்துள்ளார். இதை தொடர்ந்து ஆர்த்தியை போலீசார் கைது செய்தனர்.