விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
பாலிவுட்டின் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய் நடித்த தமிழன் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் அதன்பின் பாலிவுட்டில் டாப் ஹீரோயினாக வளர்ந்தார். ஹாலிவுட் வரை சென்றவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து, வாடகைத் தாய் மூலம் குழந்தையும் பெற்றார். சினிமாவில் நடிகைகளுக்கு சம்பள விஷயத்தில் பாகுபாடு காட்டப்படுகிறது என குற்றம் சாட்டுகிறார் பிரியங்கா.
அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது : ‛‛எனது நிறத்தை வைத்து என்னை ‛கருப்பு பூனை' என கிண்டல் செய்தனர். சினிமாவில் ஆண் நடிகர்களுக்கே சம்பளம் அதிகமாக வழங்கப்படுகிறது. அவர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் மட்டுமே நான் பெற்றேன். நான் மட்டுமல்லாது பல நடிகைகளுக்கு இது இன்னமும் தொடர்கிறது. மேலும் படப்பிடிப்பில் நடிகைகள் நீண்டநேரம் காத்திருக்கணும், நடிகர்களுக்கு அப்படி இல்லை, நேரத்திற்கு வந்து செல்வர். ஹாலிவுட்டிலும் இந்த நிலை உள்ளது'' என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.