நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
பாலிவுட்டில் அமீர்கான் நடித்து வெளியான லால் சிங் தத்தா படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து தற்காலிகமாக நடிப்புக்கு ஓய்வு கொடுத்திருக்கிறார். ஒன்றரை ஆண்டுகளுக்கு எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருக்கிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மும்பையில் அமீர்கானின் மகள் இராகான் மற்றும் நுபுர் சிக்கரே ஆகியோரின் திருமண நிச்சயதார்த்த விழா பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.
மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் சினிமாவின் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், கமல்ஹாசனின் இளைய மகளும் நடிகையுமான அக்ஷரா ஹாசனும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அக்ஷரா ஹாசனும், இராகாணும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் அக்சரா ஹாசன் கலந்து கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.