ஒரே நாளில் தமிழ், தெலுங்கில் இரண்டு முக்கிய ரீரிலீஸ் | 50 கோடி வசூல் கடந்த 'பாகுபலி தி எபிக்' | கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்' | இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் | பிளாஷ்பேக்: முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: தமிழில் படமான நோபல் பரிசு எழுத்தாளரின் கதை | பீடி, சுருட்டு குடிக்க பயிற்சி எடுத்த கீதா கைலாசம் |

கிரிக்கெட் வீரர்களுக்கும், சினிமாவுக்கும் அப்படி ஒரு பந்தம் பல வருடங்களாகவே தொடர்கிறது. கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் நடிப்பார்கள், இல்லாவிட்டால் சினிமா நடிகையை திருமணம் செய்வார்கள் இப்படியாக தொடர்கிறது இந்த பந்தம். தற்போது தோணி சினிமா தயாரிக்கவும், நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார். கிரிக்கெட் பற்றிய படங்களும் வெளிவந்து வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் தற்போதைய இளம் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவன் டபுள் எக்ஸ்எல் என்ற இந்தி படத்தில் நடித்திருக்கிறார். காமெடி படமான இதில் தமிழில் காலா, வலிமை படங்களில் நடித்த ஹீமா குரைஷி நடித்திருக்கிறர். தமிழ் நடிகர் மகத் ராகவேந்திரா இந்த படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார்.
சட்ரம் ரமணி இயக்கம் இந்த படத்தில் சோனாக்ஷி சின்ஹா இன்னொரு நாயகியாக நடித்திருக்கிறார். முழுநீள காமெடி படமான இது வருகிற நவம்பர் 4ம் தேதி வெளிவருகிறது. “இந்தப் படத்தில் சொல்லப்படும் கருத்து ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். சமூகத்துக்கு அழகான செய்தியை கொடுக்கும் படம் என்பதால் நடிக்க சம்மதித்தேன்” என்கிறார் ஷிகர் தவன்.