23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் தலைவராக செயல்பட்டவர் லலித் மோடி. அதன்பிறகு சில ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்து அங்கு லலித் வசித்து வருகிறார். அவ்வப்போது ஏதாவது ஒரு செய்தியில் அவரது பெயர் இடம் பெறும்.
கடந்த ஜுலை மாதம் அவர் தனது சமூக வலைத்தளத்தில் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென்னுடன் 'புதிய வாழ்க்கை' ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் சுஷ்மிதா சென் பற்றி தன்னுடைய புரொபைலில் குறிப்பிட்டிருந்ததை தற்போது நீக்கியுள்ளார். அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. சுஷ்மிதா கடந்த வாரம் அவரது முன்னாள் ஆண் நண்பரான ரோஹ்மான் ஷால் உடன் சுற்றியதே அதற்குக் காரணம் என பாலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
இருப்பினும் இன்ஸ்டா தளத்தில் சுஷ்மிதா உடன் உள்ள புகைப்படங்களை லலித் நீக்கவில்லை.